Mohamed Rashmy Ahamed (Sri Lanka/ UK) was born in Akkaraipattu on the east coast of Sri Lanka. He has been living in the UK since the mid 2000s. He has published four collections of poetry in Tamil, including Kaakollappatta Vaazhvu, Aayiram Kiraamangalai Thindra Aadu, Eethenin Paambukal and E Thanathu Peyarai Maranthu Ponathu. He has a collection of poetry, a collection of short stories, and a novel due for publication next year. He has an MA in Visual Arts, and is deeply engaged in the field of design. He has designed the covers of more than a hundred publications to date. His poems have been translated into many languages, including English.
English
Tamil
1.
It takes the span of a hundred days
For a tender green to appear on the bare branches –
Between two shades of green two hundred
So the shades of green, sapling – dense – dark may unfurl
A hundred a hundred a hundred times the sun must climb.
It takes a thousand nights
Between the eruption of the branch
And the appearance of the first flower of the season—
The waiting of a thousand nights
Between the beginning in purple or in pink
And the ending in a shade of lilac.
No magic
Happens within a single day.
No time
Is contained within a single flower.
2.
When the rains do not cease the floods rise
Fish are cast into the village
The banana tree leans beside the well
Tubers erupt
Drenched ships come ashore at the doorway
Waappa struggles to breathe
He burns coconut shells to chase away the cold
He says the fruits of the rainy season are not sweet
The rainy season is sweet
Rain is war
Rain is life
Rain is love and separation
Rain is hesitation and union
This is a different rain
Merely water
3.
Far away
The day uncouples from night, rises and departs
Far away
The jasmine creeper at the entrance unfolds its fragrance
Far away
Devotional songs float on the breeze
Far away
The birds set out and begin the day
Far away
The seeping tea in the kitchen
Far away
You splash water on the doorstep
Waiting, should I return
Far away
Yet another day for you
Closer
Thoughts that have roamed and returned
1.
வெறம் காம்புகளில் மென்மையாய் பச்சை தோன்ற
நூறு பகல் பொழுதுகளாகின்றன-
இரண்டு பச்சைகளுக்கிடையே இரண்டு நூறுகள்
குருத்து - அடர் - இருட்டு என பச்சையம் நிறம் விரிய
நூறு நூறு நூறு தரம் சூரியன் எழ நேர்கிறது.
பருவத்தின் முதல் பூ தோன்ற
காம்புகள் கிளர்ந்ததில் இருந்து
ஆயிரம் இரவுகளாகின்றன-
ஊதாவில் இருந்து அல்லது இளஞ் சிவப்பில் இருந்து
லைலக் நிறத்தில் முடிவதற்கு
இரவுகள் ஆயிரம் காத்திருக்கவேண்டி இருக்கிறது.
ஒரு பொழுதுக்குள் நிகழ்ந்து விடவில்லை
மாயம் எதுவும்.
ஒரு பூவுக்குள் அடங்குவதில்லை
காலம் எதுவும்.
2.
ஓயாது மழைபெய்தால் வெள்ளம் பெருக்கெடுக்கும்
ஊருக்குள் மீன் ஏறும்
கிணற்றடியில் வாழை சாயும்
கிழங்கு ஊற்றடிக்கும்
நனைந்த கப்பல்கள் வாசலில் கரைதட்டும்
வாப்பா சுவாசிக்க வருந்துவார்
கோம்பைகளை எரித்துக் குளிர்காய்வார்
மழைக்கால பழங்களுக்கு இனிப்பில்லை என்பார்
மழைக்காலங்கள் இனிக்கும்
மழை என்பது போர்
மழை என்பது வாழ்வு
மழை என்பது காதலும் பிரிவும்
மழை என்பது ஊடலும் கூடலும்
இது வேறு மழை
வெறும் தண்ணீர்
3.
தூரே
இருளைப் புணர்ந்த பகல் பிரிந்து எழுந்து புறப்படும்
தூரே
வாசலின் கொடிமல்லிகை அலர்ந்து மணக்கும்
தூரே
பக்தி கீதங்கள் காற்றில் வரும்
தூரே
பறவைகள் வெளிப்பட்டு நாளைத் துவங்கும்
தூரே
சமயலறைத் தேநீரின் சாயம்
தூரே
நீ வாசலுக்கு நீர் தெளிப்பாய்
நான் வரக்கூடுமெனக் காத்திருப்பாய்
தூரே
உனக்குப் பிறிதும் ஒரு நாள்
அருகே
அலைந்து திரும்பிய நினைவுகள்
Translated from Tamil to English English by Nedra Rodrigo